யார் இந்த பாரத சிற்பி DR . R. பிரனேஷ் இன்பன்ட் ராஜ் ?

   என்னுடைய சொந்த ஊர் தமிழ் நாட்டில் உள்ள பாரம்பரிய வரலாற்று பெருமைகள் பல கொண்டு விளங்கி கொண்டு இருக்கும் தஞ்சாவூர் ஆகும்.

என் ஊரின் புகழ் என்பது இந்த உலகம் அறிந்த ஒன்றே ஆகும். இங்கே காணப்படும் தமிழரின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் கண்டு ஒரு தமிழனாய் நான் பெருமிதம் கொள்கினறேன்.மேலும் தரணியின் பசி போக்கும் தஞ்சை மண்ணின் விவசாயம்

வேறு எந்த மண்ணையும் விட சிறந்தது என்று ஒரு தமிழனாய் நான் எண்ணி மகிழ்கின்றேன். என் சொந்த ஊரின் பெருமைகள் கூறி நான் மகிழ்ந்தாலும் கூட 

“யாதும் ஊரே யாவரும் கேளிர் “

என்பதே என்னுடைய தாரக மந்திரம்.

செல்லும் ஊர் எல்லாம் என் ஊரே..! அங்கே வாழும் மக்களுக்கும் என் உறவினர்களே…!

அவர்களிடம் வேற்றுமை இல்லாமல் அன்பு செய்வதே என்  பணி ஆகும். 

எந்த இடத்தில் அன்பு சமமாக இருக்கின்றதோ அந்த இடத்தில் எந்த வித ஏற்தாழ்வுகளும் இருக்காது என்பது என்னுடைய கருத்து ஆகும்.

மனிதனாய் நாம் அனைவரும் சமம். 

மனிதராய் இருந்து பிற மனிதனுக்கு உதவிகள் செய்வது என்பது பெரும் வரம்

என்றே நினைக்கிறேன்.அது எல்லாருக்கும் அமைவதில்லை எனக்கு அது அமைந்ததுள்ளது என்பது எனக்கு மன நிறைவான மகிழ்ச்சியை தருகின்றது.

1 thought on “யார் இந்த பாரத சிற்பி DR . R. பிரனேஷ் இன்பன்ட் ராஜ் ?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top