அப்துல் கலாம் ஐயா அவர்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் இன்றைய இளைஞர்களுக்கு கொள்கைகள் தான்.
அவர் கூறியதில் என்னை மிகவும் உத்வேகப்படுத்தி பாதித்த வரிகள்.
“உன்னுடைய பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.
ஆனால் உன்னுடைய இறப்பு ஒரு சாதனையாக இருக்க வேண்டும்”
“உன்னுடைய தலையெழுத்து ஒரு கையெழுத்தாக மாறும் போது நீ வெற்றி பெறுகிறாய்”
இளைஞர்களே இந்த நாட்டின் தூண்கள்
போன்றவைகள் ஆகும்.
அப்துல் கலாம் ஐயா கூறியது போல நான் என்னுடைய சமூக சேவையின் மூலம் நம் நாட்டின் தூண்களாக இருக்கின்றேன் என்றே நினைக்கிறேன்.
என்னுடைய பாட்டி அவர்களே அப்துல் கலாம் ஐயா கொள்கைகளின் மீது எனக்கு பற்று வரக்காரணமாக இருந்தவர்.
ஒருவரின் சிறந்த பேச்சுக்கள் மூலம் அவர் யார் என்று அறியலாம்.அத்தகைய பேச்சுக்கள் மூலம் மனிதர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து அவர்களின் வாழ்வை வளம் பெற செய்யலாம்.
பெரும் சமுதாய புரட்சிகள் கூட சிறந்த புரட்சிகரமான பேச்சுக்களின் மூலம் உருவானதே.
நாம் பேசுவது பிறருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்.அது அவர்களின் வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை அளிக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் இந்த சமுதாயத்தில் தன்னம்பிக்கையோடு வாழ தொடங்கினால் இந்த சமூகம் ஒரு ஜனநாயக மாற்றம் பெறும்.
என்னுடைய மோட்டிவேஷனல் பேச்சுக்களின் மூலம் மக்களுக்கு சமூக சேவை ஆற்றவது.பிறருக்கு எவ்வாறு உதவிகள் செய்வது.சமமான சமநீதி பற்றியும் பேசி வருகின்றேன்.
இதனால் பலரும் பயன் அடைந்து வருகின்றனர்.