அரசியல் பணி என்பது மக்களுக்கு பணியாற்றும் ஒரு சமூக பணி தானே.அதனால் அரசியல் வேறு சமூக பணி அல்லது சமூக சேவை வேறு என்று நான் வேறுபடுத்தி பார்ப்பதில்லை.
ஆகையால் மக்களுக்கு சமூக சேவை செய்வதற்காகவே நான் அரசியலுக்கு வர வேண்டும் என்கின்ற ஒரு எண்ணம் என்னுள் வந்து சிறந்த அரசியல் தலைவர்கள் எல்லாம் மக்களுக்காவே சேவைகள் செய்து தன் வாழ்நாட்களை அர்பணித்தவர்களே.
இந்த சமூகத்தில் நீ அனைவருக்கும் சமமான உரிமைகள் வர வேண்டும் என்று நினைத்தால்
வேறு எவரேனும் தலைவராக வந்து போராட வேண்டும் என்று நினைக்காதே
நீயே தலைவனாக மாறு.
நீ மக்களுக்கு பயனற்ற புகழ் பெற்ற தலைவனாக கரும் புகையாக இருப்பதை விட..!
மக்களுக்கு பயனுள்ள மக்கள் தலைவனாக மழை தரும் மேகமாக இரு..!
நீங்கள் ஏன் பல துறைகள் மக்களின் நலனுக்காக போராட இருக்கும் போது அரசியலை தேர்ந்தெடுத்தீர்கள் பாரத சிற்பி DR.R.பிரனேஷ் இன்பன்ட் ராஜ்..?
பல துறைகள் மக்களுக்காக சேவை செய்ய இருந்தாலும் கூட.
அரசியல் என்பது மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு.
இதை தேர்ந்தெடுப்பதுன் மூலம் என்னுடைய சமூக சேவை பாதிக்கப்பட்ட மற்றும் நலிவுற்ற மக்களை எளிதில் சென்றடையும் என்று நினைத்தேன்.
மேலும் ஒவ்வொரு மக்களுக்கும் அவர்களின் தேவைகள் அறிந்து சமூக பணி ஆற்றவே
நான் அரசியலை தேர்ந்தெடுத்தேன்.