நான் நம் நாட்டின் சிறந்த ஜனாதிபதியாக வேண்டும்.அதன் மூலம் நம் நாட்டு மக்களின் நலனுக்காக பணியாற்ற வேண்டும்.
என்னுடைய குடும்பத்தில் உள்ள நபர்கள், நண்பர்கள், மற்றும் மக்கள் இவர்களே என்னுடைய சமூக சேவை பணிகளில் எனக்கு துணையாக இருப்பவர்கள்.
சமூக பணி ஆற்ற தனி மனிதனாக நான் பல தடைகளையும், விமர்சனங்களையும் தாண்டியே வந்துள்ளேன். அதை தாண்டி நான் சமூக சேவை செய்கின்றேன் பாதிக்கப்பட்ட மக்களின் நல வாழ்விற்க்காக தான் அவர்களின் வாழ்வு நலமாக இருக்க வேண்டும் என்பது தான்.
ஒவ்வொரு இளைஞர்களும் தங்களுக்கான வாழ்க்கை மட்டும் வாழமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமூக சேவை செய்ய தன் நலம் இல்லாத பொது வாழ்க்கை வாழ வேண்டும். இந்த சமூகத்தில் மக்களுக்கு என்ன உரிமைகள் இருக்கின்றது என்பது அறியாமையில் இருக்கும் மனிதர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.அதை அவர்களும் அறிந்து இருக்க வேண்டும்.
சேவை செய்ய பிறர் வருவார் என்ற நிலையினை மாற்றி அவர்களே சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்பதே சமூக சேவை செய்ய வரும் இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவது.