ஒரு சமூக சேவகனின் பாதை

உங்களது இந்த கேள்வி மகிழ்ச்சி தருகின்றது மிகவும் நன்றி, முதலில் நான் சமூக செய்தது என்றால் என்னுடைய பள்ளி படிப்பின் போது தான் அது பள்ளி அளவிளானது 6 மற்றும் 7 ஆம் வகுப்புகளில் படிக்கும் போது JRC ல் சேர்ந்து பணியாற்றினேன்.8,9, மற்றும் 10 வகுப்புகளில் படிக்கும் போது சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 

JRC ல் சேர்ந்து பணியாற்றினேன்.

11 மற்றும் 12 வகுப்பில் படிக்கும் போது NSS சேர்ந்து பணியாற்றினேன்.அதில் லீடராக இருந்து மற்றவர்களை வழி நடத்தினேன். இது எல்லாம் சமூக சேவை செய்ய எனக்குள் இருந்த தூண்டுதலான நிகழ்வுகளாக இருந்தாலும் கூட. நான் சமூக சேவை செய்ய முக்கிய காரணமாக இருந்தவர் என்னுடைய பாட்டி p. விசுவாசம் அவர்கள் தான்.என்னுடைய கார்டியனும் அவர்களே . மற்றும் என்னுடைய பெற்றோர்கள் நான் செய்யும் ஒவ்வொரு சிறிய சமூக சேவைகளிலும் கூட என்னை ஊக்கப்படுத்தியவர்கள்.

நான் பள்ளியை தாண்டி இந்த சமூகத்தில் வாழும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று உணர்ந்தது நான் பள்ளி படிக்கும் போது சென்று இருந்த NSS கேம்ப் ல தான். அப்பொழுது தான் இந்த வெளி உலகத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலையை பற்றி நான் உணரத்தொடங்கினேன்.அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றே என் மனதினை பாதித்து இன்று உங்கள் முன் என்னை சமூக சேவகராக நிறுத்தியுள்ளது.

    ஒரு மனிதனில் மாற்றம் வேண்டும் என்றால் அவனுக்குள் ஏதேனும் ஒரு மகிழ்ச்சியான அல்லது ஒரு சோகமான அல்லது ஒரு புரட்சியான பாதிப்பு இருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன்.

அதே மாதிரி என்னுள் நிகழ்ந்த ஒரு பாதிப்பே என்னுடைய சமூக சேவைக்கு வழி வகுத்தது.

நான் பள்ளியில் படிக்கும் போது NSS கேம்ப் சென்று இருந்தேன்.அந்த கேம்ப் முடிவடைவதற்கு மீதம் மூன்று நாட்கள் இருந்து.அப்பொழுது என்னிடம் 15 ரூபாய் பணம் மட்டுமே கையில் இருந்தது.

IMG 0265

அப்பொழுது ஒரு வயதான பாட்டி ஒருவர் வந்தார் என்னுடைய பார்வையில் அவர் பசியில் இருப்பது போல் தோன்றியது.எனவே நான் என்னிடம் இருந்த பணம் 15 ரூபாயை அவரிடம் கொடுத்தேன். ஆனால் அவர் அதை வாங்க மறுத்து விட்டார். நீ பார்ப்பதற்கு என் பேரன் போல் இருக்கிறாய் எனக்கு ஏதாவது உன் கைகளால் வாங்கி கொடு என்றார். அவர் கூறிய அந்த வார்த்தை என் மனதில் ஏதோ ஒரு உணர்வினை ஏற்படுத்தியது.நாங்கள் இருந்த பகுதியில் கடைகள் இல்லை.என்ன வாங்கி தருவது என்று நான் யோசித்த போது அந்த வழியாக டீ விற்க்கும் ஒருவர் டூவிலரில் வந்தார் அவரிடம் நான் ஐந்து ரூபாய்க்கு பன்னும் பத்து ரூபாய்க்கு டீயும் வாங்கி கொடுத்தேன்.

அதை சாப்பிட்ட அவரின் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு மகிழ்ச்சி.நீ நல்லா இருப்பா என்று என்னை வாழ்த்தினார். அந்த வாழ்த்தே இன்று என்னை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய இன்று வரை என்னை வழி காட்டி அழைத்து வருகின்றது. அந்த பாட்டிக்கு அன்று நான் செய்த சிறு உதவியே என் முதல் சமூக சேவை. என் மனதினை பாதித்த நிகழ்வும் அதுவே ஆகும். இதை நான் அன்று என்னுடைய பள்ளி தாளாளர் அவர்களிடம் ஆசிரியரிடமும் மற்றும் என்னை சார்ந்த நண்பர்களிடமும் கூறினேன்.இன்று பிறரிடமும் உங்களிடமும் கூறுகின்றேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top